சிலுவையைப் பற்றி நின்று
துக்கம் மகனைக் கண்ணுற்று.
வம்மிப் பொங்கினாள் ஈன்றாள்
தெய்வ மாதா மயங்கினார்,
சஞ்சலத்தால் கலங்கினார்,
பாய்ந்ததாத்துமாவில் வாள்.
பாக்கியவதி மாதா உற்றார்
சிலுவையை நோக்கிப் பார்த்தார்,
அந்தோ என்ன வேதனை,
ஏசு புத்திரனிழந்து,
துக்க சாகரத்தில் ஆழ்ந்து,
சோகமுற்றார் அன்னை.
இணையில்லா இடருற்ற
அன்னை அருந்துயருற
யாவரும் உருகாரோ?
தெய்வ மைந்தன் தாயார் இந்த
துக்க பாத்திரம் அருந்த,
மாதாவோடழார் யாரோ?