பெற்றோர் உன்னை மறந்தாலும்
உற்றார் உன்னை துறந்தாலும்
தேசமே உன்னைப் பகைத்துத் தள்ளினாலும்
இயேசு உன்னை ஏற்றுக்கொள்வார்
குற்றம் பல புரிந்தாலும்
நீ சற்றும் தயங்காமலே
இயேசுவிடம் வந்துவிட்டாலுன்னை
நேசமாய் மன்னித்தருள்வார்
காசு ஒன்றும் கேட்பதில்லை
இந்த இயேசு உன்னை மீட்பதர்க்கு
நெஞ்சம் மட்டும் தந்துவிட்டால் நானே
தஞ்சம் என காத்துக்கொள்வார்