← Back to Album
பரிதி தூங்கிட
பாதிரா நேரத்தில்
பாரிடை பிறந்தவரே
பாவங்கள் போக்கவும்
சாபங்கள் நீக்கவும்
தரணியில் பிறந்தவரே
பரிதி தூங்கிட
பாதிரா நேரத்தில்
பாரிடை பிறந்தவரே
பாவங்கள் போக்கவும்
சாபங்கள் நீக்கவும்
தரணியில் பிறந்தவரே
மயில்கள் ஆடட்டும்
குயில்கள் பாடட்டும்
வானவர் வாயார
வாழ்த்திடட்டும்
மயில்கள் ஆடட்டும்
குயில்கள் பாடட்டும்
வானவர் வாயார
வாழ்த்திடட்டும்
தேவ குமாரா
தாவீதின் மைந்தா
தாழ்மையின் திருவுருவே
தியாகத்தின் திருவடிவே
பரிதி தூங்கிட
பாதிரா நேரத்தில்
பாரிடை பிறந்தவரே
பாவங்கள் போக்கவும்
சாபங்கள் நீக்கவும்
தரணியில் பிறந்தவரே
கனிகள் கனியட்டும்
மலர்கள் மலரட்டும்
பரமன் நின்
பெருமை புகழ்ந்திடட்டும்
கனிகள் கனியட்டும்
மலர்கள் மலரட்டும்
பரமன் நின்
பெருமை புகழ்ந்திடட்டும்
மாட்டுக்கொட்டிலில்
மாபெரும் தேவன்
மானிடன் ஆனாரே
மாந்தரை மீட்டிடவே
பரிதி தூங்கிட
பாதிரா நேரத்தில்
பாரிடை பிறந்தவரே
பாவங்கள் போக்கவும்
சாபங்கள் நீக்கவும்
தரணியில் பிறந்தவரே
Advertisement
Ad content goes here.