என் ஓசை கேட்கின்றதா இயேசையா
ஆழத்திலிருந்து அழைக்கின்றேனே
(அழுகின்றேனே)
பாழ் உலக பாரத்தாலே
பாவ உலகில் நான் மாள வேண்டுமா
உம் சித்தம் நிறைவேற ஒப்புவித்தேன்
என்சித்தத்தால் எங்கேயோ தவறிவிட்டேன்
இரக்கங்கள் பாராட்டுமே இயேசய்யா
இன்னும் ஒரே முறை எழுப்பிடுமே
எத்தனை தூரம் அலைந்தேனய்யா
அத்தனையும் உம் ஆணையாலே
நினைத்தருளும் உம் வாக்குகளை
வனைந்தது போதுமே இயேசய்யா
ஜெபம் கேட்டு பதில் தந்து எழுப்பினீரே
ஜெயக்கிறிஸ்துவே என்றும் மாறாதவர்
பயங்கள் பறந்தோட செய்தவரே
என் பரிசுத்தம் உயரட்டும் இயேசய்யா